நம்மைச் சுற்றி ஒரு சதி வலை பின்னப்படுகிறது எனில் அந்த எதிரிகள் யார் என்பதைக் கூர்ந்து அறிய புத்தியைக் கூர்மை தீட்டுவோம். ஊரிலோ தேசத்திலோ யார் யாரோ நினைவுக்கு வந்து சந்தேகத்தில் சிக்குவார்கள். இப்லீஸ் எனும் ஷைத்தான்களின் மாய குரு மட்டும் ஞாபகத்திற்கு வரமாட்டான். இந்தக் கன்னி வெடியிலிருந்தே அவனது சதியின் பாதாளச் சாக்கடைக்குள் விழுந்துவிடுகிறோம். ஆனால், இவனைத்தான் வெளிப்படையான எதிரி என்று அம்பலப்படுத்தி அறிவிக்கிறான் நமது இரட்சகன். கண்களுக்குப் புலப்படாத இந்தச் சதிகாரனின் படையினர் ஜின்களிலும் மனிதர்களிலும் பல வேடங்களுடன் ஊடுருவி மாய வலையை வீசுகிறார்கள். குழப்பங்களின் நெருப்புக் கொப்பறையில் எப்போது நாம் விழுந்து கருகுவோம் என்று கண் வைத்து காத்திருக்கிறார்கள். இந்தச் சோதனையிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வழி எதிரியின் நகர்வுகளை அறிந்து அல்லாஹ்வின் உதவியோடும் நேர்வழியோடும் தப்பிப்பதுதான். இதற்கான வெளிச்சத்தைத் தன் வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா இந்த நூலில்.
No more offers for this product!
General Inquiries
There are no inquiries yet.
Reviews
There are no reviews yet.